சிறந்த தொழில் நுட்பத்தினைக் கொண்ட அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளை உருவாக்கி அறிமுகப்படுத்துமம் சம்சுங் நிறுவனமானது தற்போது Galaxy S5 என்ற ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் மும்முரமாக இறங்கியுள்ளது.

 

ஏற்கணவே Galaxy S4 வெளியாகி விற்பனையில் அசத்திக்கொண்டிருக்கும் நிலையில் இப்புதிய கைப்பேசியும் மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புக்களை ஏற்படத்தியுள்ளது.

 

சம்சுங் நிறுவனமும் அவ்வப்போது சில தகவல்களை வெளியிட்டு எதிர்பார்ப்பினை மேலும் அதிகரித்துவருகின்றது.

 

இக்கைப்பேசியின் திரையானது 5.25 அங்குல அளவுடையதாகவும், 2560 x 1440 Pixel Resolution உடையதாகவும் இருப்பதுடன் LCD தொழில்நுட்பத்தினைக் கொண்டது என மற்றுமொரு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

 

இது தவிர Snapdragon 800/805 அல்லது 64-bit Exynos 6 Processor, 4GB RAM என்பனவற்றுடன் கூகுளின் Android 4.4 KitKat இயங்குதளத்தினைக் கொண்டு வெளிவரவுள்ளது.