சிந்தனைகள்

அறிவுள்ளவன் தன் செல்வத்தை
மூளையில் வைத்திருக்க வேண்டும்.
தன் இதயத்தில் வைத்திருக்கக் கூடாது.

 

-ஜோதைன்ஸ்வீப்ட்

கடவுள் மாறாதவர்.
அவரைப் பற்றி
மக்கள் தெரிந்து கொண்டிருக்கும்
எண்ணங்களே
மாறிக் கொண்டிருக்கின்றன.

 

- காந்தியடிகள்

உலகம் மிகப் பரந்தது.
அதில் அவர்கள் முயற்சியைப் பொறுத்தும்,
திறமையைப் பொறுத்தும்
எல்லோரும் முன்னேறுகின்றனர்.

 

-ஐன்ஸ்டீன்

எங்கெல்லாம் கட்டுப்பாடுகள்
அதிகமாகிறதோ…
அங்கெல்லாம் கள்ளத்தனம்
தானாகவே குடியேறிவிடும்.

 

- பிராங்க்ளின்

நிலத்தை அடமானம் வைத்தால்
திருப்பிக் கொள்ளலாம்.
நாணயத்தை இழந்துவிட்டால்
ஒரு நாளும் திரும்பப் பெற இயலாது.

 

- மில்டன்

நட்புதான் சுகங்களில்
மட்டுமில்லாமல்
துக்கத்திலும் பங்கேற்கிறது.

 

- வைரமுத்து.

பிடிக்காத இடங்களில் இருந்து
மட்டுமல்ல. பிடிக்காதவர்களிடம்
இருந்தும் விலகி வாழ்வதே
சந்தோசத்தை தரும்!

 

நிலவன்

துன்பப்படுவோர் மத்தியில்
நாம் மகிழ்ச்சியாக வாழ்வது
கொடுமையிலும் கொடுமை.

 

- புத்தர்

மிகையாக வளைப்பதால்
வில் முறிந்து விடும்
வளையாமலே இருந்தால்
மனம் முறிந்து விடும்.

 

- பேகன்

யார் புகழ்ச்சியில் பேராசை
உடையவர்களாக இருக்கிறார்களோ
அவர்கள் தகுதியில் ஏழைகளாக
இருப்பதை நிரூபிக்கின்றனர்.

 

- புளுடர்கி

Page suivante »