ஹைக்கூகவிதைகள்

நம்பிக்கை

கடவுளும், காதலும் உண்மை
அதன்மேல் நம்பிக்கை
உள்ளவரை! (Lire la suite…)

கவிஞன்

காலத்தை காகிதத்தில்
கட்டி வைப்பவன்
கவிஞன்! (Lire la suite…)

மழைத்துளிகள்

உன்னில் உறைந்துவிட ஆசைப்பட்டன…
உன் மீது விழுந்த‌
மழைத்துளிகள்! (Lire la suite…)

கடிகாரம்

பலருக்கு ஓய்வு நேரம்
காட்டுகிறது தான்
ஓய்வெடுக்காமல்! (Lire la suite…)

மன்னிப்பு

எல்லா குற்றங்களையும்
மன்னிக்கும் ஒரே நீதிமன்றம்
அம்மாவின் இதயம்! (Lire la suite…)

ஆஹா!

இரண்டே புள்ளிகள்தான்
ஆனாலும் அழகிய கவிதை
அவள் கண்கள்…! (Lire la suite…)

குழந்தை மனம்

அனைவரும்
படிக்கவேண்டிய
மிகப்பெரிய காவியம்! (Lire la suite…)

ஜாதி

என்னைக் தொடுவதற்கு அல்ல‌
மணப்பதற்கு மட்டும்தான்
தடை! (Lire la suite…)

வறுமை

அவர்கள் சிரிக்கின்றார்கள்
என்மீது பாசத்தினால் அல்ல‌
கிழிந்த அழுக்காடைகளைப் பார்த்து! (Lire la suite…)

வியர்வை

வறுமையைக் கழுவ
புறப்படும் நதி
வியர்வை! (Lire la suite…)

« Page précédente Page suivante »