ஹைக்கூகவிதைகள்

அது சரி

பிச்சைக்காரன் பாத்திரத்தில்
அதிகமாய் விழுந்தது
அறிவுரைகள்! (Lire la suite…)

கொசு!

மனிதர்களை இரவில்
தாக்கும் போர்
விமானங்கள்! (Lire la suite…)

சாதனை

சாதிக்க மலையேறிய பின்
சறுக்கி விழுந்தது
பயம் மட்டுமே! (Lire la suite…)

திருநங்கை!

உதாரணம்…
பிரம்மனுக்கும் மறதி
உண்டு என்பதற்கு! (Lire la suite…)

பசி

சமூகப்பணியில் மாடுகள்
நகரத்துச் சுவர்களில்
ஆபாச சுவரொட்டிகள் (Lire la suite…)

நிலா

காப்பாற்றினேன்
வாளியில் வந்தது
கிணற்று நிலா! (Lire la suite…)

இருள்!

மேடை வெளிச்சம்
இருட்டாக்கியது
மனசை! (Lire la suite…)

நிஜம்!

பொய் உண்மையானதால்
தூரமாய் போனது
நிஜம்! (Lire la suite…)

தீப்பெட்டி!

அட்டைப்பெட்டிக்குள்
ஐம்பது தியாகிகள்..
தீப்பெட்டி…! (Lire la suite…)

நதிகள்

கோடையிலும் வற்றுவதில்லை
சாலையோர சாக்கடை
நதிகள்! (Lire la suite…)

Page suivante »