ரெடி பியரினை போல முகத்தோற்றம் கொண்ட மாமிச பட்சணி மிருகம் ஒன்று முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த 30 வருடகால விலங்குகள் தொடர்பான கண்டுபிடிப்பில் இது முக்கியமான இடத்தினை பெறுகின்றது.

 

ஒலிங்கிற்றோ (Olinguito) என்கின்ற பெயரிடப்பட்டுள்ள இம்மிருகம் மாமிச பட்சணியாக இருப்பதோடு ஏறத்தாள 1 கிலேகிராம் நிறையுடையது. மண்ணிறம் மற்றும் செம்மஞ்சள் நிற கலவை நிறத்திலுள்ள இது, கொலம்பியா மற்றும் ஈக்குவடோரிலுள்ள அடர் காட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பெரிய கண்களையுடைய ஒலிங்கிற்கோ raccoon மிருகக் குடும்பத்தில் மிகச்சிறியது என்கின்ற பெயரைப் பெற்றுள்ளது. இம்மிருகம் அதிகமாக தாவரங்கள் மற்றும் பழங்களை உண்பது அவதானிக்கப்பட்டாலும், மாமிச பட்சணி என்றே விஞ்ஞானிகளால் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

 

bassaricyon-neblina-new-carnivorous-mammal_70382_600x450

 

இந்த மிருகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகளின் குழுவிற்கு தலைமை தாங்கிய Kristofer Helgen என்கின்ற விஞ்ஞானி, கண்டுபிடிப்புக்களுக்கான காலம் இன்னமும் முடிவடையவில்லை என தெரிவித்திருக்கின்றார்.