அரியவகை இனத்தை சேர்ந்த புறா ஒன்று ரூ.1.63 கோடிக்கு ஏலம் போய் உலக சாதனை படைத்துள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் கடந்த திங்களன்று நடந்த ஏலத்தில் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.பிரசல்சில் வசிப்பவர் பீட்டர் வின்ஸ்ட்ரா. புறா, கோழி உள்ளிட்ட பறவைகளை வளர்த்து ஏலத்தில் விற்பது தான் இவருக்கு தொழில். கடந்த திங்களன்று தனது 245 புறாக்களை ஏலம் விட உள்ளதாக இணையதளத்தில் தெரிவித்திருந்தார். இதில் டால்ஸ்விட்டா என்ற அரியவகை இன புறாவும் இருந்தது.

 

இந்த ஏலத்தில் பங்கேற்ற சீனாவை சேர்ந்த தொழிலதிபர் ஹூசென்யு என்பவர் அதிக விலைக்கு டால்ஸ்விட்டா புறாவை ஏலம் எடுத்து சாதனை படைத்துள்ளார். இந்திய ரூபாயின் மதிப்பு 1.63 கோடி ஆகும்.

 

மேலும் இதுகுறித்து ஹூசென்யு கருத்து தெரிவிக்கையில், இனப்பெருக்கம் செய்யும் நோக்கில்தான் இதை ஏலம் எடுத்தேன் என்றும் பந்தயத்துக்காக பயன்படுத்த மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.