05.06.2015 வெள்ளிக் கிழமை லண்டன் மாநகரில் ஈஸ்ட்ஹாமில் அமைந்திருக்கும் முருகன் ஆலயத்தில் « வீனஸ் தமிழ் » இணையத்தளத்தின் ஆரம்ப நிகழ்வு மிகவும் சிறப்பாக விசேஷ பூஜையோடு இடம் பெற்றது.

 

இவ் வைபவத்தை லிபரா (lebara) குழுமத்தின் இயக்குனர்களில் ஒருவரான திரு.யோ.ரதீசன் அவர்களின் தந்தையார் திருமிகு த.யோகநாதன் அவர்கள் கலந்து கொண்டு « வீனஸ் தமிழ் » இணையத்தளத்தை முதல் பார்வையாளராக கணணியை அழுத்தி ஆரம்பித்து வைத்ததோடு, முதல் விளம்பரத்திற்கான சிறப்புப் பணத்தையும் கொடுத்து, ஆசியும் வழங்கினார்.

 

இவ் வைபவத்தில் திருமிகு த.யோகநாதன் அவர்கள் « வீனஸ் தமிழ் » இணையத்தளத்தின் இயக்குனர் பிரியாலயம் துரைஸ் அவரது சகோதரர் மு.மகேஸ்வரன் மற்றும் ஆலயபிரதம குருக்கள், ஆலயநிர்வாகிகள் ஆகியோரை படங்களில் காணலாம். வீனஸ் தமிழ் இணையத்தளத்தின் பிரதமஆசிரியர் « கலைக்காவலர் » வண்ணை தெய்வம்அவர்கள் தவிர்க்கமுடியாத காரணத்தால் கலந்து கொள்ள முடியவில்லை.
www.venustamil.com