விழிகள் கலையகம் வெளியிட்டிருக்கும் புதிய « குறும்படம் – வேலை ». இந்தப் படத்தில்… வதிவிட உரிமை இல்லாத ஒரு இளைஞன் ஒழுங்காக வேலை செய்து கொண்டிருக்கின்றான். திடீரென்று தாமதமாக வேலைக்குச் செல்கின்றான்.

முதலாளி வருவதற்கு முன்பு உடையை மாற்றி விட்டு வரும்படி நண்பர்கள் கூறுகின்றனர். அப்போது நண்பர்களிடம் தனக்கு வதிவிட உரிமை கிடைத்த செய்தியை கூறிவிட்டு, வேலையில் இருந்து விலகுவதாகவும் கூறுகின்றான்.

அதன் பின்பு அந்த இளைஞனுக்கு அவர் எதிர் பார்த்தது போன்று நல்லதொரு வெலை கிடைத்ததா? இல்லையா? என்பதை படைத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!

எமது கலைஞர்களின் குறைகளைப் புறந்தள்ளி விட்டு, நிறைவான பக்கங்களை வரவேற்று வாழ்த்துவோம்…!