பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பதற்கு ஏற்ப அவற்றின் இரை தேடும் திறமையும் பல விதங்களில் காணப்படுகின்றது.இதே போன்று தென்னாபிரிக்காவின் நமீபியா கடற்பிரதேசத்தில் காணப்படக்கூடிய இந்த வினோத வகை பறவைகள் மீன்களையே வேட்டையாடி இரையாக்குகின்றன.

 

அவ்வாறு இரைதேடும்போது பிடிபட்ட மீன்களை தமது கீழ்சொண்டுப்பகுதியை படகு போன்ற அமைப்பில் மாற்றி அதனுள் போடுகின்றன. இவ்வாறு செய்வதன் மூலம் ஒரே சந்தர்ப்பத்தில் அதிகளவான மீன்களை பெற்றுக்கொள்ள இந்தப் பறவைகளால் முடிகின்றன.