விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு குடியுரிமை வழங்கப்படும் என ஈக்வடார் அரசு அறிவித்துள்ளது.விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்க நாட்டின் பல்வேறு ரக்சியங்களை இணைய தளங்களில் வெளியிட்டு அதிர்ச்சி அலைகளை ஏற்படுடுத்தியவர்.பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்ட அசாஞ்சேவை கைது செய்ய அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வந்தது. ஆனால், அவர்களிடம் சிக்காமல் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் இரண்டு ஆண்டாக தஞ்சம் அடைந்தார்.

 

இதற்கிடையே, பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில் கடந்த 2010-ம் ஆண்டு ஸ்வீடன் கீழ் நீதிமன்றம் அசாஞ்சேவுக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து அசாஞ்சே தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஸ்வீடன் நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது. இந்நிலையில், அசாஞ்சேவுக்கு எங்கள் நாட்டு குடியுரிமை வழங்கப்படும் என ஈக்வடார் அரசு அறிவித்துள்ளது. அசாஞ்சேவுக்கு பாதுகாப்பான இடம் கிடைக்கும் வரை ஈக்வடார் தூதரகத்திலேயே தங்கலாம். ஸ்வீடன் அதிகாரிகள் அவரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்திக் கொள்ளலாம் என ஈக்வடார் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.