யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக் இடையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற மோதலில் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர். கலைப்பீடத்தின் 4ஆம் வருட மற்றும் 3ஆம் வருட மாணவர்களுக்கு இடையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. இதனால், குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மோதலில் காயமடைந்த கலைப்பீட மாணவர்கள் மூவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.