இன மத பேதங்கள் யாவும் கடந்து
நாடும் மொழியும் தாண்டி
பாடுபட்ட பாட்டாளிகளின் தியாகம்
கண்டங்கள் ஐந்தையும் ஒன்றிணைத்து
அண்டத்தில் மேதினம் மேன்மை பெற்றதே !

 

முதலாளித்துவ சுரண்டலும் கொத்தடிமையும்
வேதனக் குறைப்பும் வேலைப் பழுவும்
வெடித்தது சிக்காக்கோவில் புரட்சியாக
போர்க்கொடியைத் தூக்கினர் தொழிலாளர்கள்
ஒன்று கூடிக் குரல் கொடுத்தனர் உரமாக
கிடைத்தது வெற்றி மேதினியில் மேதினமாய் !

 

மேதினமே நீ மேதினியின் வடமாக இருப்பதால்
திடமாக இருக்கிறது பொருளாதார சமூகம்
தேராக அசைகிறது தேசத்தின் வாழ்வு
சிந்திய வியர்வையும் வடிந்த குருதியும்
தந்ததே வரலாற்றை, மேதினியில் மேதினமாய் !

 

ரஜனி அன்ரன் (B.A)