வன்னித்தாய்  சிறைப்பட்டு  வதைபடுவது  கண்டு
பொறுமை இழந்தவள்  பொங்கிப்  போராடினாள்
அரிவாளுடன் மார்தட்டி நின்ற மறவர் படைதான்
சுடு பொறியுடன் தோள் தட்டி போரிட்டனர்

 

நாளும் உரிமை மறுத்த உலுத்தரை எல்லைவிட்டகற்றினர்
வஞ்சக‌ வல்லாதிக்கம் விசம் தூவி அழித்தான்
சிங்கள தேச இரங்கா கருங்காலி வதை முகாம்களில்
ந‌ஞ்சு ஊசி ஆயுதத்தால் குருத்துக்கள் அறைபடும் ச‌த்தம் கேட்டு
தமிழ்த்தாய் அனலில் மெழுகானாள்

 

வெஞ்சிறை வாடும் தலைமுறை மீட்பைக் காணவே
வெம்பியழுது நொந்து கொதிக்கும் எரிமலைத் தேசம்
ப‌தைக்கின்ற எங்கள் தாயைப் பார்த்து
அங்குமிங்கும் பல்லிளிக்கும் கூட்டம்
தேசிய அமைப்பின் ஆட்டம்
புகளிடத்திலும் ஊரிலும் இப்படியொரு நரிக்கூட்டம்
எட்டாவது வருடம் தாண்டி நடக்கும்
முள்ளிவாய்க்கால் நினைவு ஞாபகமில்லாது
நீதிமாள மேதினச் செம்போர் சிக்காக்கோ மார்க்ஸியம்
புரட்சி எழுச்சி நாளின்றுதான் கோசங்களின் வாசகம்
ஈட்டிபோல் நினைவில் குத்தும்

 

இது தட்டியெழுப்பி வல்லாதிக்க நாசங்கள் கேட்காதா?
முள்ளி வாய்க்கால் இனக்கொலை அங்குமிங்குமானது
பாரின் பாதையெங்கும் பட்டதுயர் கூறுவதற்காகவே
கால் பதித்தோம் துளியும் இற்றவரை இரங்கலையோ?

 

ஆயுதங்கள் மேலுள்ள பயம் அமைதியில் இல்லையே
ஆருக்கும் அதைப்பற்றிய கவலையும் இனியில்லையோ?
இவர்கள் விட்டுச் செல்ல
சமாதான வெள்ளைப் புறாவின் ஒலிவ் இலை
கள்ளப்புறா மட்டில் பன்னீர் தெளிக்கட்டும்!

 

அக்கினிக்கவிஞர்
மா.கி.கிரிஸ்ரியன்