இந்து சமயக் கடவுள்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் எனும் மூன்று கடவுள்கள் முப்பெரும் தெய்வங்கள் என்றும் இவர்களுக்குத் துணையாக உள்ள சரஸ்வதி, லெட்சுமி, சக்தி எனும் முப்பெரும் தேவியர்கள் உள்ளனர் என்றும் இந்து சமய நம்பிக்கை உள்ளது. இவை எண் மூன்றுக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. இது போல் தமிழர்களிடையே மூன்றுக்கு பெருமை தரும் வேறு சில தகவல்களும் உள்ளன. அவை எவையென்று உங்களுக்குத் தெரியுமா?

 

பொருள் – அறம், பொருள், இன்பம்

சுடர் – சூரியன், சந்திரன், நெருப்பு

உலகம் – பூலோகம், பரலோகம், பாதாளம்

தொழில் – ஆக்கல், காத்தல், அழித்தல்

அரசர் – சேரர், சோழர், பாண்டியர்

தமிழ் – இயல், இசை, நாடகம்

நூல் – முதல், வழி, சார்பு

காலம் – இறப்பு, நிகழ்வு, எதிர்வு

இடம் – தன்மை, முன்னிலை, படர்க்கை

பாவினம் – தாழிசை, துறை, விருத்தம்

முப்பொருள் – பதி, பசு, பாசம்

மலம் – ஆணவம், கன்மம், மாயை

பொறி – மனம், வாக்கு, காயம்

குணம் – சாத்துவிகம், இராசதம், தாமதம்

குற்றம் – காமம், வெகுளி, மயக்கம்

சக்தி – இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி

தீ – ஆகவனீயம், தக்கிணாக்கீனியம், காருசுபத்தியம்

உயிர்த்தீ – உதரத்தீ, விந்துத்தீ, சினத்தீ

பிணி – வாதம், பித்தம், கபம்

கடுகம் – சுக்கு, திப்பிலி, மிளகு

காய் – கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்

கனி – மா, பலா, வாழை

முந்நீர் – ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர்

 

தொகுப்பு: கணேஷ் அரவிந்த்