எந்த விஷயத்திலும் ஈகோ பார்க்காதீர்கள். இதைப்போய் நான் அவளிடம் கேட்க வேண்டுமா? என்று மட்டும் எண்ணாதீர்கள். உங்களுக்காகவே வாழ வந்தவளிடம், நீங்கள் எந்த விஷயத்தையும் சொல்லலாமே! மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே!.

 

எனவே அனைத்து விஷயத்திலுமே உங்கள் மனைவியிடம் அன்பை பரிமாறிக் கொள்ளுங்கள். வெளியில் மனைவியுடன் செல்லும்போது அவளை நெருங்கியபடியே செல்லுங்கள். முடிந்தால் அவளது கரத்தை பற்றிக் கொண்டே செல்லுங்கள். இந்த பாதுகாப்பை எல்லா பெண்களுமே கணவனிடம் எதிர்பார்ப்பார்கள்.

 

அப்புறம் பாருங்கள் உங்கள் வார்த்தைக்கு சரி என்ற பதிலைத் தவிர வேறு எதையும் யோசிக்கமாட்டார் உங்கள் மனைவி. பிறகு தெளிந்த நீரோடை போல வாழ்க்கை தெளிவாக செல்லும். வேலைக்கு செல்லும் தம்பதியர்கள் கிடைக்கும் கொஞ்ச நேரத்தையும் உபயோகமாக செலவழியுங்கள். அந்த நேரத்தில் சீரியஸ் பேச்சுக்கள் வேண்டாமே.

 

ஏனொனில் இந்த பேச்சு தான் இருவருக்குள்ளும் ஈகோவை வளர்க்கும். அது உங்களின் சந்தோசத்தை பறித்துவிடும். வார விடுமுறை நாட்களை உங்கள் இருவருக்காக மட்டுமே ஒதுக்குங்கள் அந்த நாட்களில் கூட பார்ட்டி நண்பர்கள் வீடு என பொழுதை கழிக்க வேண்டாம்.

 

நன்றாக இருவரும் சேர்ந்து ஓய்வெடுங்கள். அது அடுத்த வாரத்திற்கான உற்சாகத்தை அளிக்கும். என்னென்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை இருவரும் சேர்ந்து திட்டமிடுங்கள்.