பிரித்தானியாவில் பல்கலைக்கழங்களில் படிக்கும் மாணவிகள் தங்களது படிப்பு செலவு மற்றும் இதர பொருளாதார தேவைகளுக்காக, SeekingArrangement.com எனும் இணையதளத்தை நாடுகின்றனர்.

 

அதாவது, இந்த இணையதளம் டேட்டிங் செல்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. வயதான நபர்களுடன் இப்பெண்கள் டேட்டிங் செல்வதால் அவர்கள் ‘sugar daddies’ என அழைக்கப்படுகின்றனர். அதே போன்று இந்த மாணவிகள் ‘sugar baby’ என அழைக்கப்படுகின்றனர்.

 

பயின்று வரும் 23 வயதான பெல்லா என்ற மாணவி கூறியதாவது, SeekingArrangement.com என்ற தளத்திற்கு சென்று, Sign Up செய்து எனது புகைப்படம் மற்றும் என்னைப்பற்றிய ஒரு Profile கொடுத்துக்கொண்டேன்.இதன் வாயிலாக, 39 வயதுடைய தொழிலதிபர் மற்றும் 44 வயதுடைய BIT analyst ஆகிய இருவரும் என்னை தொடர்பு கொண்டனர். இவர்கள் இருவருடனும் காபி ஷாப் மற்றும் வெளி இடங்களுக்கு சென்றேன். தற்போது இவர்கள் இருவரையும் அன்றாடம் சந்திப்பு, எங்கயோவது மதிய உணவுக்கு செல்வோம்.

 

முதல் முறை சந்திப்பின் போது Taxi செலவுக்காக, 250 பவுண்ட் கொடுத்தார்கள். இரண்டாவது முறை சென்றபோது £400 கொடுத்தார்கள். தற்போது இவர்கள் இருவரும் தான் எனது படிப்பிற்கான செலவினை பார்த்துக்கொள்கிறார்கள் என கூறியுள்ளார்.

 

இந்த தளத்தில் 2017 ஆம் ஆண்டில் மட்டும், 75,000 மாணவிகள் தங்களை பதிவுசெய்து வைத்துள்ளனர். 3 மில்லியன் மாணவிகள் ஏற்கனவே பதிவு செய்துவிட்டனர்.இந்த இணையதளம் மாணவிகள் தங்கள் பொழுதுபோக்கிற்காகவும், பொருளாதார நிலையை சரிசெய்துகொள்ளவும் பயன்படும் ஒன்றாக மாறிவிட்டது.