சுபர்த்தனா மூவீஸ் படைப்பகம் தொடர்ச்சியாக நல்ல கருத்தாழ‌ம் மிக்க கதைகளை வெளியிட்டு வருகிறது. அவற்றில் அதிகமான குறும்படங்கள் எமது தேசியம், சமூகம் சார்ந்தவையாகவே இருக்கின்றன.

 

இப்போது புதிதாக சுபர்த்தனா மூவீஸ் வெளியிட்டிருக்கும் « குறும்படம் –  தெளிவு » இதை இன்றைய‌ காலத்தில் எமக்குத் தேவையான படைப்பாகவே பார்க்க முடிகிறது.

 

வெளிநாட்டுக் கலாச்சாரங்களில் மூழ்கி, எமது கலாச்சார வாழ்வைத் தொலைத்து விடுவதையே சுகமென நினைத்து வாழும் எங்கள் இளையோருக்கு நல்ல பாடம் புகட்டுகிறது இந்தக் குறும்படம்!

 

பெற்றோர்களின் கண்டிப்பைத் தண்டனையாக நினைத்து, பெற்றவர்களைத் தண்டிக்கும் பரிதாப நிலை புலத்தில் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது…

 

சரியான புரிதலின்றித் தப்பான பாதையில் மனதை அலையவிடும் சிறார்களை இந்தக் குறும்படம் நல்லபடி சிந்திக்கத் தூண்டும்.

 

கண்டிப்பான தாய் – தந்தையை எதிரியாகப் பார்க்காமல் தெய்வமாகக் கும்பிட வைக்கும் இந்தத் தெளிவு குறும்படம்!

 

இயக்குனரின் ஆழமான சிந்தனைக்கு உயிரூட்டிய கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்…!

-எதிரி!