பூமியை தாக்க விண்கல் ஒன்று பாய்ந்து வருகிறது. விண்ணில் சூரியனை சுற்றி விண்மீன் போன்ற பல குறுங்கோள்கள் சுற்றி வருகின்றன. அவை சுற்றுப் பாதை விலகும் பட்சத்தில் பூமியின் மீது மோதி தாக்குகிறது. அவற்றை “விண்கல்” என அழைக்கின்றனர். பூமியை நோக்கி வரும் விண்கற்களில் பெரும்பாலானவை புவியீர்ப்பு விசை காரணமாக எரிந்து சாம்பலாகி விடுகின்றன. எனவே, விண்கற்கள் என்றும் அவை அழைக்கப்படுகின்றன.

 

பல விண் கற்கள் பூமியில் விழுந்து குறைந்த அளவில் சேதங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில் “அபோ பிஸ்” என்ற ராட்சத விண்கல் பூமியை நோக்கி பாய்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

இதை கடந்த 2004-ம் ஆண்டில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர். அப்போது அது பூமியில் இருந்து 36 ஆயிரம் கி.மீட்டர் தூரத்தில் இருந்தது. அது படிப்படியாக கீழ் இறங்கி 2029-ம் ஆண்டில் பூமியை தாக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

 

அதே நேரத்தில் இந்த விண்கல் பூமியை தாக்காது. வரும் வழியில் புவி ஈர்ப்பு வட்டத்துக்குள் நுழைந்தவுடன் எரிந்து சாம் பலாகி விடும் என்றும் தெரிவிக்கின்றனர். ஒரு வேளை அது வருகிற 2038-ம் ஆண்டில் பூமியை தாக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.