புதிய தலை முறை இளம் வயதில் இன்று தூக்கியுள்ளது ஆயுதங்கள். இது கீழ்த்தரமான செயல்பாடுகளைத்தான் உருவாக்கும். இது அபாயகரமான தாக்கத்தின் வெளிப்பாடாக கொள்ள முடிகிறது. வாள்வெட்டுக் குழுக்களை உருவாக்கும். தீயசக்திகளை இனம் காணவேண்டும்.பிரபாகரன் மானத்தையும், ரோசத்தையும், வீரத்தையும், நல்லடக்கத்தையும் இயக்கத்தில் வளர்த்தார்.

 

இப்படியான இழிசெயல்கள் செய்வதற்கு அல்ல. தவறான நடத்தையில் ஈடுபட்டால் கொடுக்கப்படும் தண்டனைகளைப் பெற்றோர்கள் பெரியவர்கள் விளக்கமாகவும், தேவையான தண்டனையாகவும் விபரிக்கக் காண்பீர்கள். மட்டை அடியும், திருக்கை வாள் அடியும் உங்கள் தவறான நடத்தையை விட்டொழியச் செய்துவிடும். இவ்வாறு அவர்கால ஆட்சியின் மாட்சி திகழ்ந்தது.

 

அறனெறிமுறையோடுதான் மாவீரர்கள் மத்திதியில் போதித்துப் பயிற்ச்சிவித்தார். தமிழன் போர்முறை 2009 க்குப் பின்னர் நெறிகெட்ட அரசாங்கத்தின் கைக் கூலிகளும், அக்கறை காட்டாத தலைவரகள் என்று தலையாட்டும் பொம்மைகளும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத கள்ளத்தனம்தான் இதன் விளைச்சலுக்கும், பெருக்கத்திற்கும் காரணம்.

 

பிரபாகரனைக் கூப்பிடுகின்றார்கள். யுத்தகாலத்தை விரும்புகின்றார்கள். தமிழர் உரிமை விடுதலைக்கு உதவாத, விரும்பாத, கெடூரமான சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டுதான் இருக்கிறது. கற்பழிப்பு படுகொலை நிகழ்வுகளை அடுக்கும்போது நம்மை அறியாமலே பிரபாகரன் வரமாட்டாரா என்று கூப்பிடுகின்றோம். வாள்வெட்டுக் குழுக்களின் பின்னணியில் எச்சக்தி துணை நிற்கிறார்கள் என்பது சிங்கள இராணுவம்? பொலீசுக்கும்? அரசாங்கத்தின் ஏவல் நாய்களுக்கும் தெரியும்.

 

சமகாலப் புத்திஜீவிச் சமூதாய விற்பன்னர்களும் அறிவர். அவர்கள் விளங்கப்படுத்திச் சொல்லப் பயப்படவில்லை. பதவிகள், பணம் பறிபோய்விடும் என்ற அச்சத்தில் அடங்கியிருக்கின்றனர். புகலிடம் பெற்று வாழ்பவர் சிலரும் சிந்திப்பவர்களாக இல்லை. இந்தக் குழுப்பாட்டில் புகலிடம் பெற்று வாழ்பவர்கள் குறைபாட்டிற்குரியவர்கள் அதிகமெனச் சொல்லலாம். இவையெல்லாம் எங்கள் காலத் தலைவன் முகம் காட்டாத நிலையில் வெளிப்படுகிறது.

 

தமிழர் தங்கள் வழிக்கும் மனப்பான்மைக்கும் தேசம், தேசியம் மக்கள் தேவை வாழ்வுரிமைகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்களை தக்க நேரத்தில் தாக்கத்தை விளைவிக்கும் போது பிரபாகரன் என்ற குரல் வான்முட்டி ஒலிக்கிறது. அறிவியல் மனப்பான்மை வளர்க்கும் இளம் வயது இளைஞர்கள் முயற்சிக்குப் பதிலாக காவாலித் தன்மை, காடைத்தனம் கொண்ட சண்டித்தனத்தைத் தூண்டிவிட்டுத், தமிழினத்தின் ஒற்றுமைத் தன்மையை முன்வைத்து, போலி அறிவீலித்தனத்தை புதிய தலைமுறையினரிடம் வலுப்பெற வைப்பதில் நாட்டிலும், புகலிடத்திலும் போலி முகங்கள் பலமுனையில் பெருக்கெடுத்தும் உள்ளது.

 

புலம்பெயர் தமிழரிடம் அறிவற்ற அசட்டைத்தனமும், பணமும் இருக்கிறேதே தவிர உறவுகள் மீதான அறிவும், உயர்வும், விடுதலையுணர்வும் வளர்ந்துள்ளதாக 30 வருடங்களுக்கு மேலாக பிரான்சில் வாழும் கவிஞன் இவன் குறிப்பிடமாட்டன். பணம்தான் உறவுகளை நேசிக்கும் என்று சிந்திப்பவர்கள் அறிவும், உணர்வும் தமிழீழ மக்களை மீட்டுவிடும் உயர்த்திவிடும் என்பதைத்தானா!! யாழ்மண்ணில் நல்லூரில் நடந்த வாள்வெட்டு கற்பழிப்பு படுகொலைச் சம்பவங்கள் காட்டுகிறது?

 

தமிழினத்தை இழிவுபடுத்துவதாகவே கருதுவதற்கான பின்னணிப் பிரயோகங்கள் பலப்பல வகையாக பரவிக்கிடக்கின்றதையும் அறியமுடிகிறது. வெளி நாட்டு பணம் ஓட்டுமொத்த இளைஞர்களை மண்ணில் மட்டுமல்ல, புகலிடத்திலும் பொல்லாத போக்கிரிகளாக்கிவிட்டது. தேவைக்கு அதிகமான இளைஞர்கள் கையில் பணம் அறிவு அவர்களிடம் இல்லாத் தன்மையை வளர்க்கிறது. உறவுகள் கண்ணீர் துடைக்கக் கொடுப்பதாக நினைக்கின்ற புகலிடத் தமிழன் அங்கு மோசமன குழுச்சேர்ப்பிற்கும், மோட்டார் சைக்கில் ஓட்டத்திற்கும், திசைமாறிப் போய் தங்களுக்குத் தாங்களே புதைகுழிகளை ஆயத்தப்படுத்துகிறார்கள் என்பதைச் சிந்தித்தால் இந்த குழுச் சண்டித்தனம் குழிக்குள் புதைந்துவிடும். உரிமைக்காகப் போராடிய வீரத்தின் முன் புதிய தலைமுறை வழிநடத்தல் தவறக் காரணங்கள் பல…

 

தங்களுக்குத் தாங்களே புதைகுழிகளை ஆயத்தப்படுத்துகிறார்கள். என்பதைத்தான் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் நிந்தனைக்குரிய சிந்தனையை சிறிது விலத்தி. நன்றாகச் சிந்தித்தால் இந்தக் குழுச் சண்டித்தனம் குழிக்குள் மூழ்கிவிடும். தமிழீழத்தில் வாழும் தலைவர்கள் கேடுகெட்ட ஒட்டுக்குழுத் துரோகிகள் ஒன்றாகக் குரல் கொடுத்தால், இந்தச் சின்னவயதுச் சமூக விரோதச் சக்திகள் வளரவிடாமல் தடுத்துவிடலாம்.

 

தவறக் காரனங்கள் இழிவாகப் பெருகி முடை நாற்றம் வீசப்போகிறது. 2009 க்குப் பின்னர் தலை முறையினரிடம் சிக்கல் வரும் போதெல்லாம் பிரபாகரன் வரவேண்டும் என்றால். அதை எதிர்க்க சிங்களப் பகைவன் சர்வதேச சக்திகளோடும், தமிழ் கைகூலி இயக்கத் துரோகிகளோடும், இழிவான தீயசக்திகளோடும் வருவான். கவிஞன் இதைப்பற்றி விபரமாக எழுதுவதானால் நேருவின் உலக சரித்திரம் போலாகிவிடும்.

 

சமூக அமைதியைக் குலைக்கின்றார்கள் என்ற நெருக்குதல் நேரும்போது பிரபாகரனைக் கூப்பிடுகின்றீர்கள். பிரபாகரன் வழியை ஏற்றுக் கொண்டவர்கள் என்பது உண்மையானால் இந்தக்குழுக்கள் சோர்ந்து தூசிபோல் மறைந்துவிடும். “தலைவர்கள், வஞ்சகக் கழுகுகள், இயக்கத் துரோகிகள் ஒன்றாக பிரபாகரன் வழி நடப்போம் என்றாலே தற்போதைய சூழலில் வாள்வெட்டுக்கள், கற்பழிப்பு படுகொலைகள், பாவங்கள், நாசங்கள் ஒழியும்.

 

பணமும், பகட்டும் சமூகத்தை முன் நகர்த்திச் செல்லவிடாது. காலத்தையும் நாம் ஒப்பிட்டுப் பாரக்க வேண்டியிருக்கிறது. பிரபாகரன் காலம் என்பது போராட்ட காலம். அவர் வழி பகைவனிடம் இருந்த முதலில் தமிழ் சமூக்தை மீட்டெடுக்க வேண்டும். அடுத்த முன்னெடுப்பு பகைவனை மண்ணைவிட்டு அகற்றுவது பிரபாகரன் முற்று முழுதாக சமூகத்தை நல்வழிக்குக் கொண்டுவந்தார். அவரோடு இணைந்து நின்று போராடி அனைவருக்கும் அந்தத் துணிவு இருந்தது.

 

இப்போது இருக்கும் கால பகைவன் காலம் பிரபாகரன் விதைத்த விளைவுகளில் விசத்தை ஊற்றிக் கொஞ்சம் கொஞ்சமாக அறுக்கிறான். இராணுவத்தையும், பொலீசையும் வைத்துக் கொண்டு எங்கள் கைகூலிகளையும் இணைத்து நல்லிணக்கமென ஆதிக்கம் செலுத்தி அடக்குகிறான. அரசாங்க நலனுக்காக குழுக்களை உருவாக்கி தீயசக்திகளைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறான். இதை ஆழமாகச் சிந்தித்துப் பின்னர் காரியமாற்றும் பழக்கமும் விடுபட்டுப் போய்விட் டது.

 

வடக்குக் கிழக்கில் இன்னும் வேகமாகப் பரவப்போகிறது ஒன்றைத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இயக்கம் கட்சியல்ல, விடுதலை இயக்கம்! யார் தயவிலும் கைபிடிக்குள்ளும் வைத்துக் கொள்ள முடியாது. நமது இன்றைய கட்சிகள் தீயசதிகளை எதிர்க்காமல் இருக்கிறார்கள். எதிரான கருத்துக்களையும் விடாமல் இருக்கிறார்கள். பயந்தாங்கொள்ளியான மனிதர்கள் பலவீனமானவன். பலவீனமானவன் இனத்திற்கும் விடுதலைக்கும் மிகப்பெரிய அபாயகரமானவர்கள்.

 

அக்கினிக்கவிஞர்
-மா.கி.கிறிஸ்ரியன்