பிரான்ஸில் 25.05.2013 அன்று முதல் முறையாக தமிழர் சதுரங்க ஒன்றியத்தால் தமிழருக்காக நாடு தழுவிய ரீதியில் நடாத்தப்பட்ட மாபெரும் சதுரங்க சுற்றுப்போட்டி தலைவர் திரு.செல்லையா தெய்வேந்திரராஜா(ரவி) தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

வயது எல்லை கடந்து சிறியோர் முதல் பெரியோர் வரை மிகுந்த ஆர்வத்தோடு பங்குபற்றி காலை 10 மணிக்கு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான போட்டிகள் மாலை வரை சுறுசுறுப்பாக 20 நிமிடங்கள் கொண்ட 8 சுற்றுக்களாக நடைபெற்றது. நடுவர்களாகவும் போட்டி நடத்துனர்களாகவும் இருந்து எமக்கு பெரும் பங்காற்றியவர்களாக Noisy l’echec சதுரங்க தலைவர் திரு. நாராயணன் , Canal St.Martien Echecs சதுரங்க கழகத்தின் தலைவரும் சர்வதேச சதுரங்க நடுவருமாகிய திரு. Xavier Rubini ஆகிய இவர்களுக்கு எமது ஒன்றியத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

இப்போட்டியை சிறப்பாக நடாத்துவதற்கு ஆதரவு வழங்கிய வர்த்தக நிறுவனங்கள், ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள், நண்பர்கள், ஒலி அமைப்புக்கு உதவி வழங்கியவர்கள் மற்றும் எல்லா வகையிலும் இப்போட்டியை சிறப்பாக நடாத்தி முடிக்க உதவி வழங்கிய அனைவருக்கும் எமது சதுரங்க ஒன்றியத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.