தமிழ் நாட்டுத் தேர்தல் களத்தில் பல்வேறு கட்சிகள் கூட்டணிக் கட்சிகள் பிரிந்து கிடப்பது 2016 தேர்தலில்தான் அதிகமாக உள்ளது. கட்சி சார்ந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட அக்கறையோடு தமிழகத் தேர்தல் நிலவரங்களை கணமும் பிசகாமல் கண்பவன். அக்கறையோடு அனைத்துக் கட்சிகளின் கண்ணோட்டத்துடன் எல்லாத் தரப்பினரின் பம்மாத்துகளும் தெரிந்து. நடப்பதைக் காண்பதற்கிணங்கவே இதனைக் கூறுகிறேன்.

 

நிதானம் தப்பாமல் முடிவை முன்கூட்டியே கூட்டிப் பெருக்கிக் கழித்துப் பிரித்துவிட்டனர். கட்சிகள் கூட்டணிகள் ஆடும் மாயமாலம் மீட்டுப்பார்க்க முடியாதவாறு 7 ஆண்டுகள் கழிந்து முள்ளிவாய்க்கால் பிணக் கணக்கெடுப்பும் அவலமும்.. தேர்தல் களத்தில் ஈழத்தைப் பற்றிச் சிறிதளவும் அறியாதவர் நாவில் இருந்து வருவது என்ன?முன்னறியாத செய்திகளாக் குவிவதும் அதிர்ச்சிக்குரியன. ஆரோக்கியமானதல்ல.

 

தொப்புள்கொடி உறவுகள் கைகொடுப்பார்கள் என்ற நம்பிக்கையும் கைவிட்டுப்போக மே16 வாக்களிப்பு. மே18 முள்னிவாய்க்கால் நினைவு. மே19 தீர்ப்பு. முடிவினைத் தாங்கமுடியாது போகும் அரசியல் கூட்டணிக் கட்சிகள் ஆயுட்காலம் 19திகதியுடன் முடியுமா? தொடருமா? விந்தைக்குரிய வியப்புத்தான் இறுக்கமாகிவிட்டது.

 

தலைவர்களும்.தொண்டர்களும் என்னவழி நடப்பார்கள் இவர்கள் என்னென்ன தில்லுமுள்ளுகளைத் திணிப்பார்கள் 19க்குப் பின் என்பதையும் ஈழத்தவன் இப்பவே முடிவைத் தீர்மானித்து கவனித்துக் கொண்டிருக்கிறான்.

 

அத்துமீறலும் ஊழலும் உதாசீனம் ஒருவரிடம் குவியும் என்றால் அதன் பக்கத்தைத் து1க்கி நிற்ப்போரை தமிழர்கள் தலைமுறை எதிர்த்து வெறுத்து ஒதுக்கிவிடத் துணிந்துவிட்டனர்.

 

இதன் வழியை வழினடத்துபவர்கள் தேர்தல் களத்தில் அதிகம் நடமாடுகிறார்கள்.விடுதலைப் புலிகள் நேர்மையானவர்கள் உயர்ந்த உன்னதமானவர்கள் இவர்கள் பெயரை உச்சரிப்பதில் மிகக் கவனம் எடுத்துக் கொள்ளவேண்டும்

 

அதிர்ச்சிகரமான விடயங்கள்.வீ’ந்தனமாக விரையும்.தேர்தல் தோல்வியில் செயல் இழந்த போக்கில் கட்சிகளும் தலைவர்களும் இருந்த சுவடு தெரியாமலும் தொலைந்து போய்விட நேரிடலாம்.அவர்கள் காலடியில் அவர்களே வீழ்ந்துவிடுவர. பலவந்தமான குழப்பங்கள் கோரத்தாண்டவங்களாரல் தமிழ்னாட்டின் சீர்குலைவை ஏற்படுத்தும்.

 

கீழ்தனமான நிலைமைகள் நடந்தால் ஈழத்தமிழர்கள் குறிப்பாக அகதிகள் பெரும் சோதனை குள்ளக்கப்படுவர். அப்பாவிகள் மீதான அடாவடித்தனங்கள் அதிக பாதிப்பின் மீதான கொடூர த்தைக் காட்டும்.

 

புலிகளே ஈழத்தமிழருக்கு ஒரு விடிவைப் பெற்றுத் தரப் பேராடியவர்கள் என்ற நம்பிக்கை ஏழாண்டுகள் கழிந்து பிற்பாடும் வெளிப்படுத்தப்படுகிறது. வேறுஎவர் நலனையும் எதிர்பார்க்க முடியாது ஏங்கும் தமிழன் யாரிடம் மீண்டும் எதை எதிர்பார்க்க முடியும்?

 

தமிழகம் மேலும் மேலும் மத்திய அரசை நம்பி பின்புத்தியுடன் கைவிரிக்கும். அக்கறையற்ற போக்குத்தான் தோன்றும் வாய்ப்பு வலுப்பெறுவதையே காட்டுகிறது. ராஜீவ் காந்தியக் கொலை செய்யாத பழியைச் சுமந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தண்டனை பெற்றுவரும் 7.பேரின் விடுதலையே இதற்குச் சாட்சி.

 

1987 புலிகளை அழிக்கவந்த காந்தியப் படைகளால் நேர்ந்த சாவுகளும் அழிவும் 2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் முன்-பின் கோரத்தாண்டவம் ஆடிவிட்டு கோழைகளாக வெளியேறினர்.

 

முள்ளிவாய்க்கால் விடயத்தில் உலகம் மிகக் குறைந்த கவனமே செலுத்தியிருந்தனர் இலட்சம் உயிர்களை கொடுத்துவிட்ட எங்களைப் பார்த்து 7ஆண்டுகளுக்குப் பின்னரும் மனிதா பிமானம்-மனித உரிமையைக் காப்பாற்றுங்கள் மீறி நடக்கானுமதிக்காதீர்கள் எந்த இடத்தைப் படுகொலை செய்தார்களோ அந்தயிடத்தில் நின்று அச்சுறுத்துவதே தொடர்கிறது.

 

உலகத் தமிழன் எத்தனை முறையென்று ஜெனிவா மனித உரிமையின் இதயக்கதவைத் தட்டினான் என்பதைக் கவனித்துப் பார்க்கவேண்டும்

 

சிங்களக் காடையரால் சிங்கள இராணுவத்தால் இந்தியாவால் எரிந்த ஈழம் மீண்டும் எரியாது என்பதற்கு யார் பொறுப்பு?

 

பொறுப்புடன் நடக்கவேண்டிய தொப்புள்கொடி உறவுகளும் தொண்டர்களும் தலைவர்களும் தேர்தல் களத்தில் தலைகால் தெரியாமல் நடக்கின்றார்கள்.

 

தமிழர்களுக்கு எதிரான அரிசியலை இந்தியாவே இயக்குகிறது.தமிழகத் தலைவர்களால் என்ன செய்ய முடியும்.2016 மே19.னீங்கள்தான் பதிலும் விடையும் தீர்ப்பும் கூறவேண்டியவர்கள்.

 

சிறிலங்களப் படைகளின் கொடிய யுத்தத்தால் காணாத பிணக்குவியலைச் சிதறி அடுக்கிய பிணங்களை (1987) தமிழ்மக்கள் என்றுமே கண்டதில்லை. ஈழமண்ணில் நிலைகொண்டிருந்த இரண்டுவருட காலப்பகுதியில் இந்திய இரணுவம் ஆடிய கோரத்தாண்டவப் படுகொலைகளகள் கொடூரமானது.அத்தகைய இந்தியா தங்களைக் காப்பாற்றும் என்றும் இனிமேல் நம்புவதற்கும் இல்லை.

 

முள்ளிவாய்க்கால் வரை தமிழர் மண்ணில் இன்றும் முயன்று கொண்டிருக்கும் கட்சித் தலைவர்களால் என்ன கிடைக்கும்?

 

இன்றும் தமிழர்கள் போராளியாகவே இந்தியாவின் கண்களுக்குத் தெரிவது மிகப்பெரிய உலகம் போற்றும் மாவீரம் அல்லவா.

 

இதனைத் தமிழகம் புரிந்து நற்சான்றிதழ் எண்ணாதவரை தமிழ்னாட்டுத் தேர்தல் களத்தில் ஈழத்தமிழர் வாழ்வியல் நிலைப்பாட்டை கண்மூடித்தனமாகப் பிரயோகிப்பர் என்பதையே காட்டுகிறது.

 

தேர்தல் முடிவின் பின்னர் சகல நலத் திட்டங்களும் செயல்பாடுகள் யாவும் பின்னடைவு காணும் ஈழத்தமிழர் மீதான கவனம் கேள்வியாகத் தொங்கும்.யாழ்ப்பாணத்தில் 16ந்திகதி எதிர்கட்சித் தலைவர் சம்பந்தர் வாய்திறந்து சமஸ்தி ஆட்சி சரியான தீர்வு என்றார்.

 

பேச்சுக்கு எத்தனை சிங்களக் கட்சிகளின் எதிர்ப்புக் குரல்கள் சீறிப்பாய்ந்தன .என்ன வீச்சில் இனவெறித்தனத்தை இன்றும் காட்டுகிறார்கள்.திரும்பவும் முள்ளிவாய்க்கால் திரும்பாது என்பதற்கு யார் பொறுப்பு நிற்பார்?

 

நாட்டைப் பிளவுபடுத்தும் என்று பிதற்றுகிறார்களே. நாடே இரண்டாக வேண்டும் என்பது தானே தமிழன் போராட்டம்.இதன் திருத்திய வடிவத்தை வடமாகாண முதல்வர் நீதியரசர் விக்கினேஸ் வரன் முன்னிறுத்தி முழங்கக் கேட்டதும். சிங்களம் புலி வந்துவிட்டது என்று நடுங்குகிறான்.

 

தமிழகமே ஈழத்தமிழர்களின் படுகொலைகள் இரத்தால் எழுதியவரே ராஜீவ் காந்தி அத்தலைவர் போனபோக்கை இன்னமும் இந்தியா மறக்கவில்லை.

 

மே 16 வாக்களிப்பது கடமை மே18 முள்ளிவாய்க்கால் நினைவு சுமப்பது பெரும் பொறுப்பு மே19 மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வது அரசியல் நாகரீகப் பண்பு.

 

அக்கினிக்கவிஞர்
மா.கி.கிறிஸ்ரியன்