இந்தியாவில் திருச்சி – கொட்டப்பட்டில் உள்ள அகதிகள் முகாமில் மத்திய அரசின் குழுவினர் ஆய்வு செய்த போது, தமக்கு இரட்டை குடியுரிமை வேண்டும் என இலங்கை அகதிகள் கோரிக்கை விடுத்து மனு கொடுத்துள்ளனர்.

 

மத்திய அரசின் உள்விவகாரத்துறை அமைச்சகத்தை சேர்ந்த எஸ்.கே.பரிடா, சதீஸ்குமார் அடங்கிய குழுவினர் நேற்று திருச்சி, கொட்டப்பட்டில் உள்ள அகதிகள் முகாமை ஆய்வு செய்தார்கள்.

 

இதன்போது, 50க்கும் மேற்பட்ட அகதிகள் இந்த இரட்டைக்குடியுரிமை கோரிக்கை மனுக்களை கையளித்துள்ளனர்.

 

எனினும் அது சாத்தியமில்லை என ஆய்வு செய்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

“நாம் இலங்கைக்கு செல்லும் போது விமானத்தில் 20 கிலோவிற்கும் மேல் கொண்டு செல்ல முடியாது. ஆனால் கப்பலில் உரிய கட்டணம் செலுத்தி அதிக பொருட்களை கொண்டு செல்லலாம்.

 

ஆகவே சிறப்பு கப்பல்களை இயக்க வேண்டும். இலங்கை – இந்தியா இடையே போக்குவரத்து பரிவர்த்தனைகளை எளிமையாக்க வேண்டும்” என்ற கோரிக்கைகளையும் அகதிகள் முன் வைத்தனர்.