நடிகர்கள், இயக்குனர்கள் என பல நட்சத்திரங்களை உள்வாங்கி வைத்திருக்கும் « நட்சத்திரம் படைப்பகம் » தொடர்ச்சியாக பல குறும்படங்களை வெளியிட்டு வருகிறது. இவர்கள் அண்மையில் குறும்படத் திரையிடல் ஒன்றை நடாத்தியதோடு, அடுத்த பரிமாண வளர்ச்சியாக ஆறு பாடல்கள் அடங்கிய இறுவெட்டு ஒன்றையும் வெயிட்டுள்ளனர்.

 

இவர்களது அயராத உழைப்பினால் தற்போது சில குறும்படங்களின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகின்ற நிலையில்; வெளிவந்திருக்கும் குறுநாடகம் « செத்தாண்டா சேகர் »

 

இந்திய தொலைக்காட்சித் தொடர்களில் பார்த்து அலுத்துப்போன ஒரு வீட்டில் இருந்தபடி மாமியார் மருமகள் போடும் சண்டை, இங்கே கடல் தாண்டி இருந்து தொலைபேசியில் நடைபெறுகிறது.

 

இருவருக்கும் இடையில் சிக்கித் தவிப்பவர், அடங்க மறுத்த மனைவியால் கோபத்தின் எல்லைவரை சென்று என்ன செய்கின்றார் என்பதனை நாடகத்தில் பாருங்கள்!

இனிமையான குரலில் அழகாகப் பாடுகின்ற, பல குறும்படங்களில் சாதுவாக தோன்றி நடித்த நடிகை தர்சினி; கோபப்பட்டால் இப்படித்தானா இருப்பார்?  என்று எம்முள் எழுகின்ற சந்தேகங்களை ஆமோதிக்க வைக்கிறது அவரது சிறப்பான நடிப்பு!

 

கங்கேஸ், சர்வாஜினி, ஆகியோரும் தங்களுக்கு கொடுத்த பாத்திரத்தை சரியாகக் செய்துள்ளனர். கோவி சண் இந்த நாடகத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, இயக்கியிருக்கின்றார் « காற்று » « அகாலம் » ஆகிய குறும்படங்களின் இயக்குனர் சுதன் அவர்கள்!

 

வளரும் கலைஞர்களை உட்சாகப்படுத்துவோம்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!