அரசியலில் ஈடுபடவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தமையானது முட்டாள் தனமானது என இந்திய திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் தெரிவித்துள்ளார். ஆன்மீகவாதியாக தன்னை காட்டிக் கொள்ளும் ரஜினிகாந்த் அரசியல் ஈடுபடத் தகுதியற்றவர் எனத் தெரிவித்துள்ளார். கடவுளை மட்டும் நம்பும் ரஜினிகாந்த் அரசியல் அறிவு அற்றவர் என தமிழக இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். தனிப்பட்ட ரீதியாக நல்ல மனிராக ரஜினிகாந்த் காணப்பட்டாலும், நாட்டை சீர்படுத்தும் ஆளுமை அவரிடம் இல்லை என தெரிவித்துள்ளார்.

 

சமகாலத்தில் தமிழகத்தில் காணப்படும் குறைப்பாடுகளை சீர் செய்யக் கூடிய தலைமைத்துவம் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானிடம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தை தமிழ் பரம்பரையை சேர்ந்த ஒருவரே ஆட்சி செய்ய வேண்டும். அதன்மூலமே தமிழகம் எழுச்சி பெறும் என இயக்குநர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் அரசியல் அறிவற்ற நிலையினை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சினிமா பிரபலங்கள் வெற்றியை இலகுவாக பெற்றுக் கொள்கின்றனர். ரஜினிகாந்த் என்பவர் சுயநலவாதி. தன் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணுபவர். அவரினால் மக்களின் பிரச்சனைகளை அடையாளம் தீர்த்து வைக்க முடியாது என திரு.பிரபாகரன் மேலும் குறிப்பிட்டார்.