விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் கோபிநாத். தற்போது அவர் சினிமா நடிகராகி விட்டார். சமுத்திரகனி இயக்கத்தில் ஜெயம் ரவி- அமலா பால் நடிக்கும் நிமிர்ந்து நில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் விடயத்தை சொல்ல வேண்டும் என ஜெயம் ரவி ஆசைப்படுகிறார். அப்போது அவரது நினைவுக்கு வருவது நீயா நானா கோபிநாத். எனவே அவரை மட்டும் அழைத்து கொண்டு நெடுஞ்சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் டிரக்கின் உள்ளே வைத்து பேட்டி கொடுக்கிறார்.

 

இதனை முறியடிக்க சிபிஐ அதிகாரி சரத்குமார், அவர்களை துரத்துவார். பெங்களூரில் படமாக்கப்பட்ட சுமார் 20 நிமிடங்கள் ஓடும் இந்த காட்சியில் தான் கோபிநாத் நடித்துள்ளார்.

 

இதுபற்றி அவர் கூறுகையில், எனக்கு நடிக்க தெரியாது, இயக்குனர் சமுத்திரகனி நீங்கள் நீங்களாகவே வந்தால் போதும் என்று அழைத்தார்.

 

நிமிர்ந்து நில் சமுதாய பிரச்னையை பேசும் படம், வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.