விழியும் திறந்தது வழியும் தெரிந்தது
இனத்தின் விலங்குகள் உடையவில்லை!
விழுமிய சிந்தனை விளக்கங்கள் யாவும்
பரவுது அவலமும் அவஸ்தையும் அகலவில்லை!
நிலத்தில் நிமிர்ந்து நிலைத்திடும்
வல்லமை சிறந்தும் தனிமை அகலவில்லை!

 

பழுதுபடாத சிந்தனை சிறகடித்தும்
அமுது புலம்பும் நிந்தனை ஓயவில்லை!
வல்லமை விரித்தும் இனம் மொழி நிலம்
அழிக்கும் இனவெறியன் அகலவில்லை!
புண்ணில் வேலை இடுவது போல்
சிறைகள் அகற்றும் விழினீர் தீரவில்லை!

 

வாழும் வாழ்வை அழித்ததுமன்றி
சூழும் ஊரையே சுடுகாடக்கிய கொலைஞர்
கூற்றன் இன்றும் விட்டுப் போகவில்லை!
கொள்கை குறிக்கோள் யாவையும்
பள்ளத்தில் போகும் பதைப்பு மேலிடுது!

 

மன்னவன் மாண்பும் கீர்த்தியும் -இன்று
கள்ளர் பேச்சில் வாய்க்கு வந்த பேச்சானது?
தன் இனம் மறந்து தன்மானம் இழந்து
சிங்களத்திடம் கையேந்தக் குழலூதுகிறார்!

 

மைத்திரி நாளும்போடும் சகுனி வேடத்தில்
ரணில் ஆட்டும் ஏரோதன் கபட நாடகத்தில்
தலையத் தலையாட்டும் எட்டப்பர் வடிவம்
மூவராய் மூளைப்பழுதாகினர் -சிங்களவனோடு
ஓத்து நின்றாடி எத்தனை தை கண்டாய்?

 

யாழ் நகர் முதல்வராளுமை மேலோங்க
விக்னேஸ்வரன் வல்லமைதான் தனிவழி
பணத்திற்காக பதவிக்காக வாழாத வழி
குணமேவிய மன்னவன் கரன் வழி
தாய்மண் சுதந்திரமாய் வாழும் வழி
நடந்திடும் கரன்வழி நடப்பது வரன்வழி!

 

மண்ணுக்கே எல்லாம் தைமகள் பிறப்பில்
ஆடிப்பாடும் வழிவழிவந்த தாயகமண்ணை
பாயிரம் பாடிய பழம்பெரும் சாதி ஒன்றாகிட
மன்னவன் வழியும் மாவீரர் கனவும் நனவாக
ஓன்றே குலமாய் ஓருவனே தலைவனாய்
எத்தனை தை எத்தனை பிறந்த போதும்
கரன் காட்டிய வழி நடப்பதே உறுதியாகும்!

 

துயர இருள் சூழ்ந்த இரவுகள் அத்தனையும்
மறவாத பகலின் வெளிச்சமற்ற இருவுகள்!

 

-அக்கினிக்கவிஞர்
மா.கி.கிறிஸ்ரியன்