வடகொரியா-தென்கொரிய அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் தணிவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன. சியோலில் அடுத்த மாதம் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தென்கொரியா விடுத்த அழைப்பை வடகொரியா ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக இருநாடுகளிக்கிடையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை மிகவும் முக்கியத்தும் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

இன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு தென்கொரியாவைச் சேர்ந்த 5 அதிகாரிகள் வாகனங்களில் புறப்பட்டு சென்றதை உலகளவிலான ஊடகங்கள் கேமராக்களில் பதிவு செய்தன. 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இருநாட்டு அதிகாரிகளும் தென்கொரியாவில் உள்ள பஞ்சோம் நகரில் சந்தித்து பேசவுள்ளனர்.

 

அடுத்தடுத்து அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனைகளால் உலகை அச்சுறுத்தி வந்த வடகொரியா பேச்சுவார்த்தைக்கு முன்வந்து இருப்பதை உலக நாடுகள் வரவேற்றுள்ளனர். வடகொரியா அதிபருடன் கிங் ஜாங் உன்னுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தென்கொரியா உடனான போர் பயிற்சியை தற்காலிகமாக ஒத்திவைக்க உத்தரவிட்டுள்ளார்.