ஒவ்வொருவருக்கும் திருமண வாழ்க்கை நன்கு சந்தோஷமாக அமைய வேண்டும் என்று ஆசை இருக்கும். அவ்வாறு ஆசை இருந்தால் மட்டும் போதாது. அதற்கு ஒரு சிலவற்றை பொறுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அனைவருமே திருமணத்திற்கு முன்பு சுதந்திரப் பறவையாக, எந்த ஒரு தடையும் இல்லாமல் எதையும் விருப்பப்படி செய்திருப்போம்.

 

ஆனால் அதுவே திருமணம் என்று வந்துவிட்டால், வாழ்க்கை சந்தோஷமாக இருக்க விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். மேலும் ஒவ்வொருவரும் தனக்கு வரவேண்டிய வாழ்க்கை துணை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது, தனக்கு வருபவருக்கும் அவர்களது விருப்பத்திற்கேற்ப நடந்து கொள்ளவும் வேண்டும்.

 

ஆகவே சந்தோஷமான வாழ்க்கை அமைய ஒருசிலவற்றை அனுபவசாலிகள் கூறுகின்றனர்,திருமணத்திற்கு பிறகு தன் வாழ்க்கை துணையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அந்த புரிதல் இருவருக்குமே 50/50 என்று இருக்கக்கூடாது. அது உங்களிடம் இருந்து 70% பாசமும், அவர்களிடம் 30% பாசமும் வந்தாலே போதும் என்று நினைக்க வேண்டும்.

 

அதிலும் பெண்கள் தனக்கு வருபரிடம் அதிகமாக எதிர்பார்ப்பார்கள். ஆனால் ஆண்களால் அவை அனைத்தையும் வெளிப்படையாக காண்பிக்க முடியாது.

 

ஆனால் உண்மையில் ஆண்களின் மனதில், தன் மனைவியின் மீது, சொல்லமுடியாத அளவு ஆசை, பாசத்தை வைத்திருப்பர்.

 

ஆகவே அதனை புரிந்து பெண்கள் அவர்களை சந்தோஷமாக வைத்தால், அவர்கள் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக அமையும்.

 

சந்தோஷமான வாழ்க்கையில் சமாதானம் மிகவும் முக்கியமான ஒன்று. என்ன தான் சண்டை நடந்தாலும் தன் துணையை தன் உயிரைப் போன்று நேசிக்க வேண்டும்.

 

அவ்வாறு நேசித்தால், எவ்வளவு வயதாகினாலும், அந்த பாசமும், அனபும் மாறாமல் இருக்கும். இப்போது கூட நிறைய இடங்களில் வயதானவர்கள், தங்கள் துணையின் மீது வைத்துள்ள அன்பிற்கு ஈடுஇணை எதுவும் இருக்காது.

 

ஆகவே திருமணத்திற்குப் பின்னும் டேட்டிங் மற்றும் ஒரு நல்ல நட்புறவு என்பது இருவருக்கும் இடையில் இருக்க வேண்டும்.

 

இதுவே அனைவரின் மனதிலும் பெரிதும் இருக்கும் எதிர்பார்ப்பு. ஆகவே இவ்ற்றையெல்லாம் சரியாக கடைபிடிக்க முடியும் என்று நினைத்தால், வாழ்க்கையானது வாழ்நாள் முழுவதும் மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

 

இல்லையென்றால் பிரச்சனை வீடு கட்டி தங்கிவிடும் என்றும் கூறுகின்றனர்.