அவுஸ்திரேலிய- இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் அவுஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றிருக்கிறது.முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 450 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.

 

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 336 ஓட்டங்கள் எடுத்தநிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

 

மிக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய டில்ஷன் சதம் கடந்து 147 ஓட்டங்களை பெற்றார்.

 

விக்கெட் காப்பாளர் பிரசன்னா ஜெயவர்த்தன 40 ஓட்டங்களும், மேத்யூஸ் 75 ஓட்டங்களும் எடுத்தனர். பந்துவீச்சில் சிடில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

இதையடுத்து இரண்டாம் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் ஆட்டம் முடிவடையும் போது விக்கெட் இழப்பின்றி 27 ஓட்டங்களை பெற்றிருந்தது.

 

இதன் மூலம் அவுஸ்திரேலிய அணி இலங்கையை விட 141 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.