பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்­கும், இந்­திய பிரதமர் நரேந்­தி­ர­மோ­டிக்­கு­மி­டையே முக்­கி­யத்­து­வ­மிக்க நேர­டிச் சந்­திப்பொன்று அடுத்தமாதம் சுவி­ஸில் இடம்­ பெ­ற­வுள்­ளது. உல­கப் பொரு­ளா­தார மாநாட்­டில் பங்­கேற்­ப­தற்­காக பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அடுத்­த­மா­தம் சுவிட்­ஸர்­லாந்­துக்கு பய­ணம் மேற்­கொள்­ள­வுள்­ளார்.

 

இந்­தப் பய­ணத்­தின்­போதே மேற்­படி சந்­திப்பு இடம்­பெ­ற­வுள்­ளது. இதற்­கு­ரிய ஏற்­பா­டு­களை இரு­நாட்டு தூத­ர­கங்­க­ளும் செய்­து­வ­ரு­கின்­றன.

 

சம்­பூ­ரில் அனல்­மின் நிலை­யம் அமைக்­கும் இந்­தி­யா­வின் முயற்சி தோல்வி கண்­டுள்ள நிலை­யில், புதி­ய­தொரு திட்­டத்தை செயற்­ப­டுத்­து­வ­தற்கு டில்லி காய்­ந­கர்த்தி வரு­கின்­றது. அந்த முயற்சி இன்­னும் கைகூ­ட­வில்லை. மத்­தள வானூர்தி நிலை­யம் தொடர்­பான உடன்­ப­டிக்­கை­யும் இழு­பறி நிலை­யி­லேயே இருந்­து­வ­ரு­கின்­றது. இந்த ஆண்டு கைச்­சாத்­தி­டப்­ப­டும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட எட்கா உடன்­ப­டிக்­கை­யும் பிற்­போ­டப்­பட்­டுள்­ளது.

 

மேற்­படி விவ­கா­ரங்­கள் தொடர்­பில் இரு­நாட்டு தலைமை அமைச்­சர்­க­ளி­டை­யே­யான பேச்­சின்­போது விரி­வாக ஆரா­யப்­ப­ட­லாம் என்று இரா­ஜ­தந்­திர வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து அறி­ய­மு­டி­கின்­றது.

 

உல­கப் பொரு­ளா­தார மாநாடு எதிர்­வ­ரும் ஜன­வரி 22ஆம் திகதி சுவிட்­ஸர்­லாந்­தின் தலை­ந­கர் டாவோ­ஸில் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இதில் உல­கின் சம­கால பொரு­ளா­தார நிலை­மை­கள், கால­நிலை மாற்­றங்­கள் மற்­றும் நாடு­க­ளுக்­கி­டை­யி­லான வர்த்­தக நட­வ­டிக்­கை­கள் குறித்து கலந்­து­ரை­யா­டப்­ப­டும்.

 

பிரதமர் ரணில் தலை­மை­யில், நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீர, தெற்கு அபி­வி­ருத்தி மற்­றும் சட்­டம் ஒழுங்கு அமைச்­சர் சாகல ரட்­னா­யக்க, பன்­னாட்டு வர்த்­தக அமைச்­சர் மலிக் சம­ர­விக்­கி­ரம உட்­பட உயர்­மட்ட குழு­வொன்று சுவிட்­ஸர்­லாந்­துக்கு பறக்­க­வுள்­ளது.

 

இந்த மாநாட்­டில் கலந்­து­கொள்­ள­வுள்ள இந்­திய தலைமை அமைச்­சர் நரேந்­திர மோடி­யு­டன் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முக்­கி­யத்­து­வம் வாய்ந்த சந்­திப்­பொன்­றில் ஈடு­ப­ட­வுள்­ளார்.

 

இலங்­கை­யில் புதிய மின் உற்­பத்தி நிலை­ய­மொன்றை அமைப்­பது மற்­றும் மத்­தள வானூர்தி நிலைய உடன்­ப­டிக்­கை­யில் இரு­த­ரப்­புக்­கு­மி­டை­யில் ஏற்­பட்­டுள்ள கருத்து முரண்­பாட்­டால் ஏற்­பட்­ட­தேக்க நிலை உள்­ளிட்ட முக்­கிய விவ­கா­ரங்­க­ளில் இணக்­கம் காணப்­ப­டு­வது குறித்து தீர்க்­க­மாக கலந்­து­ரை­யா­ட­வுள்­ளது.