சாதிவெறியில் நீதி சாகடிக்கபட்டு
கல்விக் கண் கண்ணிழந்து
காந்தியும் அம்பேத்கரும்
அடித்து நிர்மூலமாக்கப்பட்டுள்ளனர்!

 

கல்வியில் கலந்த மாரடிப்பில்
நாளும் பொழுதாய் சதிவேர் விரைகிறது
மகாத்மாவின் கைத்தடி அடியில்
அம்பேத்கார் குற்றுயிராய்ப் பதறுகிறார்!!
ஜதராபாத் கல்வி அறைகளில்
செந்தில் ரோகித் வெமுலா வடிவில்
குருதிக் குறியீட்டில் அறைபப்பட்டுள்ளனர்!

 

அம்பேத் படகொடி சுருக்கில் ரோகித் சங்கு
ஆசான்கள் அறிவுதிறந்து சாதிசாடினின்றனர்!
சிறைகளும் விலங்குகளும் அட்டூழியங்களும்ளூ
அச்சுப்பிழையான ஒழுக்கேடனாவர்களே!!
வாருங்கள் எங்களோடு சேருங்கள்
தேசபக்திக்கு தேசியகீதம் முகாரிக்குள்!

 

குமரிச் செந்தில் மரணத்தின் விதைப்பும்
குண்டூர் ரோகித் வெமுலா இறப்புனின்று
இனியும் சாதிவெறி மீண்டும் மீட்டுவீரோ?
கல்லறைக்கு கல்லறை ஆறுதல்கூறாது
சாதி1 தீண்டாமைக்கு கல்லறை கட்டு!
இல்லை!! ஜதாரபாத் ரோகித் வெமுலா
ஏழைத்தாய் தையல் உழைப்பின் நிதி
நீதி மாறிய நியதிக்குத் தனயன் பலி!!!

 

“என்னுடைய பிறப்பிற்கு ஓரு மோசமான
விபத்து விடுதலை இல்லை!
என் பிறப்பே எனக்கொரு சாபம்”
கல்வியின் உயிரெழுத்தின் பிறப்பை
மானிட நேயமிழந்து அலங்கோலமாக்கிவிட்டது!

 

இல்லை! கீழ்சாதி ஆபத்து குத்தப்பட்டது
இதையே சிறைகள் பரிகசிக்கும்
விலங்குகள் விலங்காய் மதிக்கும்
அட்டூழியம் ஆனவத் தாண்டவமிடும்
2008 குமரியிலிருந்து செந்தில் வந்தான்
2016 குணடூர் ரோகித் வெமுலா நின்றான்
இன்னும் வேனுமா? மாணவ உயிர்வாங்கும்
நாளைத்தேடி ஒடும் சதிவேர் விரைவுதடு!

 

பாரதமாதா மடியில்
பிதாவும் மேதையும்–செந்தில்–ரோகித் ??
இன்னும் ஜனனாயகம் கல்லறையாகவில்லை
மனிதத்தை விரைவாய் நிரப்புங்கள்
புதிய பாரதம் எழுகவே! எழுகவே!!
மாணவர் சங்கொலி முழங்கவே

 

அக்கினிக்கவிஞர்
மா.கி.கிறிஸ்ரியன்