செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டியின் உதவியுடன் புதுமையான பாறைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ரோவர் என்ற விண்கலத்தை அனுப்பியது.

 

இது செவ்வாயின் நிலப்பரப்பில் உள்ள பாறைகளை படம் எடுத்து அனுப்பியது. இதுகுறித்து நாசா விஞ்ஞானி ஸ்டீவ் ஸ்குவேர்ஸ் குறிப்பிடுகையில், இந்தப் பாறையின் விளிம்புகள், வெண்மை நிறமாகவும் மையப்பகுதி அடர் சிவப்பு நிறத்துடனும் காணப்படுகிறது.

 

இதுபோன்ற பாறையை இதற்குமுன் கண்டதில்லை, இதில் கந்தகம் மற்றும் மெக்னீஷியம் அதிகளவில் காணப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.