கடந்த புதன்கிழமை அன்று புதிய கோள்களின் கண்டு பிடிப்பு பற்றி தகவலை நாசா வெளியிட்டுள்ளது. நாசாவின் கெப்ளர் தொலை நோக்கி இதனை கண்டு பிடித்துள்ளதாக கூறியுள்ளது. அதன்படி சூரிய குடும்பத்திற்கு வெளியே செழிப்பான புதிய 715 உலகங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இன்று நாம் தெரிந்த கிரகங்கள் எண்ணிக்கையை இருமடங்காக்கியுள்ளது என்று கலிபோர்னியாவின், Moffett Field நாசாவின் ஏம்ஸ் ஆராய்ச்சி மையத்தின் ஜேக் ஜே Lissauer கூறியுள்ளார்.

 

கிரகங்கள் பற்றிய புதிய வகை ஆராய்ச்சியில் கெப்ளர் குழுதான் மனிதர்கள் வசிக்கும் தகுதி வாய்ந்த பூமியை போன்ற கிரகங்களை ஆராய உதவி புரிந்து வருகிறது.’இந்த ஆராய்ச்சிதான் நாங்கள் கனிம வளங்கள் நிறைந்த, செல்வச்செழிப்பான,மனிதர்கள் வாழத்தகுந்த புதிய கிரகங்களை கண்டறிய உதவி புரிந்தது’ என்று நாசாவின் விண்வெளி ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். அப்புதிய 715 கோள்களும் 305 வெவ்வேறான நட்சத்திரங்களை சுற்றி வருகின்றன.

 

இந்த புதிய கண்டுபிடிப்பால் கிட்டதட்ட இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களின் எண்ணிக்கை 1700 ஆக உயர்ந்துள்ளது. முதல் கிரகம் 1995ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய கிரகங்களில் 95 சதவீத கோள்கள் பூமியை போன்றே பரப்பளவு, தண்ணீர், நிலப்பகுதி ஆகியவற்றை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அங்கு மனிதர்களின் வாழ்க்கை ஆதாரத்திற்கான நிலைமை நிலவுவதாக கூறப்படுகிறது.