சீமான் VS  லிங்குசாமி! டைரக்டர்ஸ் டிஷ்யூம்! கலைப்புலி தாணு தயாரிப்பில் சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘பகலவன்’ என இரண்டு வருஷத்துக்கு முன்பே செய்திகள் வந்தது.

‘ஸ்கிரிப்ட் பின் பாதியில் மாற்றம் செய்வதால் தாமதம். க்ளைமாக்ஸில் திருத்தம் நடக்குது’ என்றெல்லாம் தாமதத்திற்கு காரணம் சொல்லப்பட்டு வந்த நிலையில்… சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்க மறுத்துவிட்டார். அதனால் கிடப்பில் போடப்பட்ட படத்திட்டம் சமீபத்தில் வேகம் எடுத்தது. ஜீவாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து, தற்போது ஜெயம் ரவி தான் அந்த படத்தில் நடிக்கவிருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

 

ஓகே… இந்த மேட்டரை இப்போதைக்கு மறந்திருங்க…

 

சிங்கம் 2 சூர்யாவின் கேரியரில் திருப்புமுனை படமாக அமைந்தேவிட்டது. காக்கிச்சட்டையில் அவர் காட்டிய விறைப்பு அப்படி. இருப்பினும் தொடர்ந்து உடனடியாக காக்கி யூனிஃபார்ம் போட்டு நடித்தால் கசந்து போகும் என்பதால் இப்போதைக்கு போலிஸ் ஸ்டோரி வேண்டாம் என்கிற மனநிலையில் இருக்கிறார் சூர்யா.

 

ஓகே… இந்த மேட்டரை இப்போதைக்கு மறந்திருங்க…

 

கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கு பூஜை போட்டு ரெண்டு மாசம் ஆச்சு. ’இன்னும் ஸ்க்ரிப்ட் ஒர்க் முடியாததுதான் தாமதம்’ எனச் சொல்லப்பட்டாலும், ‘ஷூட்டிங்கை இப்போதைக்கு ஆரம்பிக்க வேண்டாம்’ என கௌதமிடம் சூர்யா சொல்லி இருக்காராம்.

 

ஓகே… இந்த மேட்டரையும் இப்போதைக்கு மறந்திருங்க…

 

ஏற்கனவே தனது இரண்டு படங்களுக்கு சூர்யாவிடம் கால்ஷீட் கேட்டிருந்தார் லிங்குசாமி. ஆனால் சூர்யாவால் தரமுடியவில்லை. இப்போது லிங்கு சொன்ன ஒரு கதை சூர்யாவுக்கு பிடித்துப்போக உடனே கால்ஷீட் கொடுத்திருக்கிறார் சூர்யா. லிங்குசாமி இயக்க அவரின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமே இந்த படத்தை தயாரிக்கிறது.

 

இப்ப சீமான் மேட்டரையும், லிங்குசாமி மேட்டரையும் நினைச்சுக்கங்க….

முன்னணி இயக்குனர்களின் கதை விவாதங்களில் கலந்து கொள்ளும் உதவி இயக்குனர் ஒருவர் மூலம், லிங்குசாமி இயக்கப் போகும் படத்தின் கதை விபரம் சீமானுக்குத் தெரியவந்தது. இதையடுத்து தமிழ்த் திரைப்பட இயக்குனர் சங்கத்தின் செயலாளர் ஆர்.கே.செல்வமணியிடம் லிங்குசாமி மீது கதை திருட்டு புகார் ஒன்றைக் கொடுத்தார் சீமான்.

 

இதையடுத்து இருதரப்பிடமும் விசாரணை நடந்தது. ‘இது என் கதை’ என்பதில் சீமானும், ‘இது என் கதை’ என்பதில் லிங்குசாமியும் உறுதியாக இருக்கின்றனர். பஞ்சாயத்து தீவிரமாக நடந்து வருகிறது.