தமது அப்பா சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் விடுதலையாகி தம்மிடம் வருவார் என்று, அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் தெரிவித்தனர். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஆனந்தசுதாகரனின் இரு பிள்ளைகளும் , தமது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

 

அது தொடர்பில் ஆனந்தசுதாகரனின் மகனான கனிதரன் தெரிவிக்கையில், “நாங்கள் வியாழக்கிழமை ஜனாதிபதியை சந்தித்து எங்கள் அம்மா உயிரிழந்து விட்டார், அப்பாவை சிறையில் அடைத்து வைத்துள்ளார்கள். அவரை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டோம். அவர் தான் அதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்” என தெரிவித்தார்.

 

அதேவேளை மகளான சங்கீதா தெரிவிக்கையில் , “நாங்கள் அப்பாவை விடுதலை செய்ய கேட்டோம் ஜனாதிபதி சித்திரை புதுவருடத்திற்கு முதல் விடுவதாக கூறியுள்ளார். புது வருடத்திற்கு அப்பா எங்களிடம் வருவார்” என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். என தெரிவித்தார்.