சவுதி அரேபியாவில் 10000 ஆயிரம் பெண்களை கால் டாக்ஸி ஓட்டுநர்களாக பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.இதன் ஒரு பகுதியாக கடந்தாண்டு செப்டம்பரில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டது, மேலும் லொறி, பைக் ஓட்டவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

இது இந்தாண்டு ஜீன் மாதம் முதல் அமுலுக்குவரவுள்ளது, இதனை தொடர்ந்து கால் டாக்ஸி நிறுவனங்கள் பெண்களை பணிக்கு அமர்த்த தொடங்கியுள்ளன.உபெர் மற்றும் துபாயை சேர்ந்த கரீம் ஆகிய கால் டாக்ஸி நிறுவனங்கள் 10 ஆயிரம் பெண் ஓட்டுநர்களைப் பணியமர்த்த நடவடிக்கை எடுத்து வருகின்றன.இதற்கு காரணம் கால் டாக்ஸிகளில் பயணிப்பவர்களில் 80 சதவிகிதம் பேர் பெண்களே ஆவர்.