உலகின் வினோதமான கொம்பு முளைத்த பாம்பு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆபிரிக்காவில் உள்ள தென்மேற்கு நாடான தன்சானியாவில் தான் மேற்படி அதிசய பாம்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

கறுப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் உள்ள குறித்த பாம்பு கரும் பச்சை நிற விழிகளையும் உடையது.

 

இதில் உள்ள விசேடம் என்னவென்றால் இந்தப்பாம்பானது ஏழு வயதாக உள்ள பெண் பாம்பு என்பது தான். இந்தப் புடையன் பாம்புக்கு Matilda’s Horned எனப் பெயரிடப்பட்டுள்ளது.

 

இந்த அரிய கண்டுபிடிப்பு தொடர்பாக தன்சானியா நாட்டு வன விலங்கு பாதுகாப்பு அமைப்பின் இயக்குனரான Tim Davenport கருத்துத் தெரிவிக்கையில்,

 

மூன்று பேர் தலைமையிலான குழுவினரே மேற்படி கொம்பு முளைத்த அதிசய பாம்பை கண்டு பிடித்தனர்.

 

இந்த வகையான பாம்புகள் 65 சென்ரிமீற்றர்கள் வரை வளரும் தன்மை கொண்டவை.

 

ஆபிரிக்காவில் கடந்த மூன்று தசாப்தங்களில் வினோதமான மூன்று பாம்புகளே கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.