பிரபல பின்னணி பாடகரும், கர்நாடக இசை வல்லுனருமான கே.ஜே. யேசுதாஸூக்கு கேரள அரசு சார்பில் சிறப்பு விருது வழங்கப்பட்டது. யேசுதாஸின் வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்பட்ட இந்த விருதானது ரூ. 1 லட்சம் ரொக்கமும், பட்டயமும் உள்ளடக்கியதாகும். திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் இந்த விருதை முதல்வர் உம்மன் சாண்டி வழங்கினார்.

 

விருதை பெற்ற பிறகு யேசுதாஸ் பேசுகையில், வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார். இந்த விழாவில் மாநில கலாசார துறை அமைச்சர் கே.சி. ஜோசப், எதிர்க்கட்சி தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.