12 வருடங்களுக்கு முன்னர் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்கள் தொடர்பில் நீதி வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது. மன்னிப்பு சபையின் டுவிட்டர் வலைத்தளத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கொலைகள் தொடர்பில் விசேட அதிரடிப்படை தரப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. எனினும் எவரும் இதுவரை சட்டத்துக்கு முன் நிறுத்தப்படவில்லை.

 

இந்த கொலைகள் 2006ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் இடம்பெற்றன. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அறிக்கையிலும் ரின்கோ 5 என்ற பெயரில் இந்த கொலைச் சம்பவம் பதிவுப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மனோகரன் ரகிவர், யோகராஜ் ஹேமசந்திரன், லோகிதராஜா ரொஹான், தங்கவேல் சிவாநந்தா மற்றும் சண்முகராஜா கஜேந்திரன் ஆகியோரே கொல்லப்பட்டிருந்தனர்.