இரவு நேரத்தில் அந்த நகருக்கு வந்த ஒரு பெண் தங்குவதற்கு எந்த ஓட்டலிலும் அறைகள் கிடைக்காமல், தவித்துக் கொண்டிருந்தாள். கடைசியில் ஓர் ஓட்டலில் அவள் மீது பரிதாபப்பட்ட ஓட்டல் உரிமையாளர்,  இந்த ஓட்டலில் தங்கக் கூடிய அறை ஒன்று உள்ளது. அதில் விமானப் படை வீரனொருவன் தங்கியிருக்கிறான். நீ வேண்டுமானால் அவனுடன் தங்கிக் கொள்ளலாம்.

 

ஆனால் அவன் பயங்கரமாகக் குறட்டை விடுவதாக பக்கத்து அறைகளில் உள்ளவர்கள் புகார் கூறியுள்ளனர்.  உனக்கு ஆட்சேபணையில்லை என்றால் தங்கிக் கொள் என்றார்.  எனக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. நான் அவனுடனேயே தங்கிக் கொள்கிறேன் என்று அவள் சொல்லி விட்டுச் சென்றாள்.

 

மறுநாள் காலை சிற்றுண்டிக்காக அவள் வந்தபோது, ஓட்டல் உரிமையாளர் கேட்டார்:  நேற்றிரவு எப்படி நன்றாகத் தூங்கினாயா? என்று கேட்டார். பரவாயில்லை. எப்படியோ அட்ஜெஸ்ட் செய்து கொண்டேன் என்றாள். எப்படி? என்று கேட்டார்.

 

அவள் சொன்னாள்… அறைக்குள் நான் சென்றவுடன் அவன் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். நான் அவனுடைய கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டேன். பின்னர் நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய்” என்று அவன் காதருகில் சொல்லிவிட்டு நான் படுத்துக் கொண்டேன். அதற்குப் பிறகு அவன் தூங்கவே இல்லை. ராத்திரி முழுக்க விழித்தபடியே படுக்கையில் அமர்ந்தபடி என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.