எட்டு கால்களுடன் பிறந்த குழந்தை ஒன்றைக் காப்பாற்ற பாகிஸ்தான் மருத்துவர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

 

இந்தக் குழந்தை பிறந்து ஒரு வாரம் தான் ஆகின்றது. இதேபோல 2005 ஆம் ஆண்டும் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் Lakshmi Tatma என்ற குழந்தையும் எட்டுக் கால்களுடன் பிறந்தது.

 

ஆனால் அந்த பெண் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு தற்போது நன்றாக வாழ்ந்து வருகின்றார்.

 

2007 ஆம் ஆண்டு லக்ஷ்மிக்கு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்ட போது உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார்.

 

2010 ஆம் ஆண்டு பாடசாலைக்கும் ஏனைய குழந்தைகளைப் போல மகிழ்ச்சியுடன் இயல்பாகச் சென்று வருகின்றார்.

 

இப்படியான வித்தியாசமான இரட்டைக் கருவானது 100,000 பேரில் ஒருவருக்கே நிகழ்கின்றது.

 

தற்போதும் பாகிஸ்தானின் கராச்சிப் பிரதேசத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பிறந்த இந்தச் சிறுவனுக்கு உதவுவதாக பாகிஸ்தான் அரச அதிகாரிகள் தரப்பில் உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது.

 

இந்தக் குழந்தையின் தகப்பனான Imran Shaikh ஒரு எக்ஸ்ரே தொழிநுட்பவியலாளர் ஆவர்.

 

குறித்த குழந்தையின் தகப்பன் கருத்துத் தெரிவிக்கையில், நாங்கள் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அரசு எங்கள் குழந்தைக்கு உதவி செய்யவுள்ளமையானது மிக்க மகிழ்ச்சியை அளிக்கின்றது.

 

ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் இப்படியான Parasitic இரட்டையர்கள் பிறப்பது வாடிக்கையாகி விட்டது. இந்தக் குழந்தைகளை பிறப்பதற்கு முதல் கண்டு பிடிப்பதும் அபூர்வமானது.