2014ம் ஆண்டுக்குரிய பிரான்ஸ் அழகுராணிப் போட்டியின் அழகுராணிப் போட்டியின் அலங்கார அணிவகுப்புக்கு சிறிலங்கா சிறந்ததொரு தேர்வல்ல என்ற முழக்கத்துடன் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள AFP சர்வதேச செய்திநிறுவனமான க்கு முன்னால் இடம்பெற்றிருந்த நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகத்துறை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன் அவர்கள் ஆற்றிய உரை :

 

ஊடகத்துறை சார்ந்து முக்கியமானதொரு தருணத்தில் நாம் அனைவரும் இங்கு கூடியிருக்கின்றோம்.

 

21ம் நூற்றாண்டின் ஈடுஇணையற்ற நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சியில் ஊடகத்துறை பல்வேறு எல்லைகளைக் கடந்து விரிந்து பரந்து சென்று கொண்டுள்ளது.

 

நாடுகளைக் கடந்த தொடர்பாடல்துறையின் ஆளுமைகளாக விளங்குகின்ற ஊடகவியலாளர்கள் தங்கள் துறைசார்ந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வரும் சமவேளை, கடும் சவால்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

 

சில நேரங்களில் தங்கள் உயிர்களையே அவர்கள் காவு கொடுகின்றனர்.

 

அந்தவகையில் சுதந்திரம் – சமத்துவம் – சகோதரத்துவம் என்ற உன்னத பண்புகளை உலகிற்கு பறைசாற்றிய பிரென்சு தேசம், இரண்டு ஊடகவியலாளர்களை மலி நாட்டில் பறிகொடுத்து நிற்கின்றது.

 

a1தீவிரவாதிகளின் கொடுஞ்செயலுக்கு தங்கள் தேசத்து இரண்டு ஊடகர்களை பலிகொடுத்த பரிதவிப்பில் நிற்கின்ற பிரென்சு தேசத்துக்கும் , மக்களுக்கும் , ஊடகத்துறையினருக்கும் தமிழர்களாகிய நாம் எமது எதோழமையினைத் தெரிவித்து நிற்கும் இவ்வேளை , சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் கோரப்பற்களுக்கு இரையாகியுள்ள இசைப்பிரியா எனும் ஈழத்தமிழ் பெண் ஊடகவியளாரின் கதையினை தங்கள் முன் கொண்டு வந்துள்ளோம்.

 

இலங்கைத்தீவில் தமிழர்கள் மீது சிறிலங்கா அரச பயங்கரவாதம் மேற்கொண்ட இனஅழிப்பு போரில் உயிருடன் அகப்பட்டு பின்னர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர் இசைப்பிரியா.

 

இவர் தமிழர் தாயகத்தில் இயங்கி வந்த தமிழர்களின் தேசிய தொலைக்காட்சியில் ஊடகராக பங்காற்றியவர் மட்டுமல்லாது ஒர் நடிகையாகவும் இருந்துள்ளார்.

 

issapriya3_moss_110113081741இசைப்பிரியா எனும் ஊடகப் பெண்மணிக்கு நடந்தேறிய கொடுமைகளை காட்சிப்பதிவாக பிரித்தானியாவில் இருந்து இயங்கி வரும் சனல்-4 தொலைக்காட்சி கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிக்கொண்டு வந்துள்ளது.

 

மானிட நேயத்தினை நேசிக்கின்ற அனைவரையும் ஒரு கணம் உலுக்கியுள்ள அந்த காட்சிப்பதிவுகளை வெளிக்கொண்டு வந்துள்ள சனல்-4 தொலைக்காட்சியும், அந்த விவரணத்தினை உருவாக்கிய ஊடகர் கலம் மக்ரே அவர்களது தொழிற்பாடு ஊடகத்துறையின் மற்றுமொரு பாய்ச்சலாகவுள்ளது.

 

அனைத்துலக அரங்கில் ஓர் அரசாங்கமாகவுள்ள சிறிலங்கா அரசுக்கு பெரும் சாவலாக சனல்-4 மாறியுள்ளமை ஊடகத்துறையின் வலிமையினை மீண்டுமொரு தடவை பறைசாற்றி நிற்கின்றது.

 

இந்த ஊடக வலிமையினை பிரித்தானிய ஊடகம் வெளிக்காட்டியதன் வழியே, பிரான்சின் வலிமைமிக்க ஏவ்பி செய்திஸ்பாதனமும் நாம் ஒன்றுகூடியுள்ளதன் நியாயத்தினையும் அதன்காரணத்தினையும், பிரென்சு தேசத்துக்கு காவிச் செல்லும் என நம்புகின்றோம்.

 

அந்தவகையில் பிரென்சு தேசம் – தமிழர்தேசம் என இத்தருணம் ஊடகத்துறை – ஊடகர்கள் என்ற பல்வேறு விடயங்கள் ஒன்றோடு ஒன்று பிண்ணிப்பிணைந்திருக்கின்ற தருணமாக இதுவுள்ளது.