சீனாவின் ஷென்ஜென் நகரில் உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், முதல் இரண்டு லீக் ஆட்டங்களில் தோற்றாலும், கடைசி லீக் ஆட்டத்தில், ஜெர்மன் வீராங்கனை ஜூலியன் செங்கை வென்று அதிர்ஷ்டவசமாக அரையிறுக்கு முன்னேறினார்.

 

இன்று நடைபெற்ற அரையறுதி போட்டியில் சாய்னா நேவால், சீன வீராங்கனை லீ ஜுவேரூயை சந்தித்தார். ஒலிம்பிக் சாம்பியனான லீ-யின் தாக்குதல் ஆட்டத்திற்கு ஈடுகொடுத்து ஆடிய சாய்னா, முதல் செட்டை 20-22 என்ற கணக்கில் போராடி இழந்தார். அதன்பின்னர் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய்னா, 2-ம் செட்டை 21-7 என்ற கணக்கில் வசமாக்கினார்.

 

வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் 3-வது செட் ஆட்டத்திலும் சாய்னா கடுமையாகப் போராடினார். ஆனால், அந்த செட்டை 13-21 என இழந்து தோல்வியைத் தழுவினார்