ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் ஐந்து வருடங்களா அல்லது ஆறு வருடங்களா என்பது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஐந்து நீதியரசர்கள் அடங்கிய குழு இன்று பகிரங்க நீதிமன்றத்தில் கூடி ஆராய்ந்துள்ளது. தமது தீர்மானம் குறித்து ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்படுமென அக் குழு தெரிவித்தது.

 

தனது பதவிகாலம் தொடர்பில் ஜனாதிபதி உயர் நீதிமன்றில் விளக்கம் கோரியிருந்த நிலையில் , அந்த விளக்கம் விரைவில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரசியலமைப்பின்படி முன்னர் ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடங்களாக இருந்தன. எனினும் , புதிய சட்டத்தின் படி அது ஐந்து வருடங்களாக குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.