தொடர்ந்து பல படைப்புகளை வெளியிட்டு வரும்…  சுபர்த்தனா மூவீஸின் புதிய குறும்படம் : உள்ளம் மட்டும்…! குடும்பமாக அமர்ந்து பார்த்து ரசிக்கவேண்டிய காதலர் தினப்படைப்பு. அழகு, வசதிவாய்ப்பு,  உருவம் இதையெல்லாம் தாண்டி உண்மைக் காதலுக்கு உள்ளம் மட்டும் போதும் என்பதை உணர்த்துகின்றது.

 

எமது தாய் மண்ணுக்காக உடல் உறுப்புகளை தியாகம் செய்த போராளிகளை உள்ளத்தில் தூக்கி உட்கார வைத்திருக்கிறது கதை. தேசம் சார்ந்த படைப்புகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் சுபர்த்தனா மூவீஸின் குறும்படங்களில் இதுவும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாக இருக்கிறது.

 

இதில் போராளியாக தோன்றும் சுரேஸ் கதைக்கேற்ப வாழ்ந்திருக்கிறார். நடிகை லலிதாவின் இயல்பான நடிப்பு அற்புதம். லோகதாஸ், ரகுநாதன், கமலவேணி, விஜி ஆகியோரும் தமது பங்கைச் சரியாகச் செய்துள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

ethiri