« எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸரஸையெல்லாம் சுட்டிருக்கிறாரு தெரியுமா..? » « இப்பதான் டைனோஸரைஸே கிடையாதே » « எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே அவர் டைனோஸரஸையெல்லாம் சுட்டுட்டாருன்னு! »

 

« ஏகப்பட்ட நாய்கள் அவரைச் சுற்றி நிற்குதே..? » « நான் சொல்லலை அவரு பதினெட்டு ‘பட்டி’க்குச் சொந்தக்காரருன்னு… »

 

« வாழைப்பழ வியாபாரியோட பையன் எப்படி இருப்பான்? » « அப்படியே அப்பனையே உரிச்சு வைச்சிருப்பான். »

 

இரண்டு நடிகைகள் உரையாடலில் இருந்து…. « யாராவது பழம் கொடுத்தால் வாங்காதே.. » « ஏன்..? » « பழம் பெறும் நடிகைனு

சொல்லிடுவாங்க..! »

 

« பீச்ல சுண்டல் வித்து, இன்னிக்கு எம்.எல்.ஏ வாயிட்டார் » « ஓ! சுண்டல்காரரா இருந்து இன்னிக்கு சுரண்டல்காரரா ஆயிட்டார்னு சொல்லு »