« போர்க்களத்தில் ‘வாள் வாள்’னு கத்துற அபயக் குரல் கேட்குதே..? » « சத்தம் போடாம வாரும். அது மன்னர் குரல்தான். எதிரிகள் வாளைப் பிடுங்கிட்டுப் போய்ட்டாங்களாம்.. »

 

« முழுங்க முடியலைன்னு சொல்லி டாக்டர்கிட்டே போனீங்களே.. என்ன ஆச்சு..? » « டாக்டர் அம்பது ரூபாயை முழுங்கிட்டாரு! »

 

« கல்யாணத்தை ஆயிரங்காலத்துப் பயிர்னுதானே சொல்லுவாங்க.. நீங்க என்ன இரண்டாயிரங் காலத்துப் பயிர்னு சொல்றீங்க? » « ஹி.. ஹி.. நான் சொன்னது இரண்டாங் கல்யாணத்தை! »

 

« உடம்பு இளைக்கறதுக்காக ஏதாவது முயற்சி செய்யக் கூடாதா? » « அதனால உனக்கென்ன? » « நாலுபேர் மத்தியில தூக்கி வைச்சுப் பேச முடியலையே »

 

« புத்தகத்துக்கும் கடிதத்துக்கும் என்ன வித்தியாசம்? » « தெரியலையே.. » « புத்தகத்தைப் படிச்சுக் கிழிக்கிறோம். கடிதத்தைக் கிழிச்சுப் படிக்கிறோம் »